2023-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில், துறைவாரியான மானியக்கோரிக்கை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு கேள்வி ஒன்றை எழுப்பினார்.
இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அப்போது, அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள், அமைச்சரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டே இருந்தனர்.
அவர்களது கூச்சலை உற்று கவனித்த சபாநாயகர் அப்பாவு, “பேரவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், அமைதியாக இருக்க வேண்டும். அமைச்சர்கள் பேசுவதை கவனிக்க வேண்டும்.. இது ஒன்றும் கேளிக்கை விடுதி கிடையாது..” என்று கண்டித்தார்.
திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், நடுநிலையாக சபாநாயகர் செயல்படுவது, பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.