தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி பெருவிழா தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பாக நடைபெறும்.
அதைப் போல் இந்தாண்டு மஹா சிவராத்திரி மற்றும் பிரதோஷம் ஆகிய இரண்டும் ஒரே நாட்களில் வருவதால் காலை முதலே பக்தர்கள் தஞ்சை பெரியக் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் காலையில் பெருவுடையாருக்கு அபிஷேகம் முடிவுற்ற நிலையில் வண்ண மலர்களால் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு 5 கால பூஜைகள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தஞ்சை மட்டும் அல்லாது பல்வேறு மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.