ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு சிறப்பு சலுகை சென்னை மெட்ரோ..!

இந்திய சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர், திரைத்துறையில் உள்ள லைட்மேன்கள் நல நிதிக்கு பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நாளை நடத்துகிறார். இரவு 7-மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியானது, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதனிடையே இசை நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ நிறுவனம் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

அதாவது நள்ளிரவு 12 மணி வரை இயங்கும் மெட்ரோ சேவையானது, நாளை ஒருநாள் மட்டும் 1 மணி நேரம் நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் இருந்து வரும் ரசிகர்கள், தங்களின் பயணச்சீட்டுகளை காண்பித்து 20 சதவீதம் சலுகை பெற்றுக்கொள்ளலாம் என்று மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.