கோவை மாவட்டத்தில், போதைப் பொருட்களின் பயன்பாட்டை தடுப்பதற்கு, புதிய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள், போதைப் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுப்பதற்கு, அம்மாவட்ட காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புறநகர் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு, போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின்பேரில், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் புதிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையை சேர்ந்த காவல்துறையினர், புறநகர் பகுதிகளில், தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.