பழனி கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு ரயில் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 27 அன்று நடைபெற இருக்கிறது. மேலும் தைப்பூச விழா பிப்ரவரி 5 அன்று நடைபெற உள்ளது. இந்த விழாக்களை கருத்தில் கொண்டு பயணிகள் வசதிக்காக மதுரை – பழனி இடையே ஒரு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி மதுரை – பழனி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06080) ஜனவரி 26, 27 மற்றும் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய நாட்களில் மதுரையிலிருந்து காலை 10.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பழனி சென்று சேரும். மறு மார்க்கத்தில் இதே நாட்களில் பழனி – மதுரை முன்பதிவில்லா விரைவு ரயில் (06079) பழனியில் இருந்து மதியம் 02.30 மணிக்கு புறப்பட்டு மாலை 05.00 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

RELATED ARTICLES

Recent News