இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தற்போது கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. நிதி நெருக்கடியால் சுமார் 150 ஊழியர்களை மூன்று மாதங்களுக்கு சம்பளம் இல்லாமல் விடுப்பில் அனுப்ப அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனம் ஏற்கனவே குறைவான விமானங்கள் மற்றும் சட்ட சிக்கல்களால் போராடி வரும் நிலையில், ஊழியர்கள் விஷயத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”இந்த 150 கேபின் குழு உறுப்பினர்கள் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக விடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் இன்னும் நிறுவனத்தின் ஊழியர்களாகத் தக்கவைக்கப்படுவார்கள்.
இந்த நேரத்தில் அவர்களின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் எஞ்சிய விடுமுறை நாள் சலுகை பராமரிக்கப்படும்” என்று கூறியுள்ளார். தற்போதைய பயண சீசனில் பயணிகளின் பற்றாக்குறை மற்றும் விமானங்களின் அளவைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.