பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்க்விட் கேம் சீரிஸ் நடிகர்!

நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான வெப் சீரிஸ் ஸ்க்விட் கேம். பெரும் வெற்றியை பெற்ற இந்த தொடரில், ஓ யோங்-சு என்ற முதியவர் அசத்தலாக நடித்திருந்தார்.

இவரது நடிப்பு, பல்வேறு தரப்பினரை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், இவர் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதாவது, 2017-ஆம் ஆண்டு அன்று, இவர் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த வழக்கை சரியாக விசாரிக்காமல், வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதுகுறித்து, அந்த பெண் நீதித்துறையிடம் முறையிட்டதில், தற்போது மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.