Connect with us

Raj News Tamil

இந்தியர்களுக்கு இலவச விசா – இலங்கை அரசாங்கம் புதிய அறிவிப்பு!

உலகம்

இந்தியர்களுக்கு இலவச விசா – இலங்கை அரசாங்கம் புதிய அறிவிப்பு!

இலங்கை அரசாங்கம் வரலாறு காணாத கடனில் சிக்கியுள்ளது. இதன்காரணமாக, அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து, பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.

எனவே, இந்த கடன் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு, அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்த முயற்சி எடுத்துள்ளது.

இதனால், இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளுக்கு, இலவச சுற்றுலா விசா வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் குடிமக்கள், இலங்கை நாட்டிற்கு இலவசமாக சுற்றுலா விசா பெற முடியும் என்று, வெளியுறவுத்துறை அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம், வரும் 2024-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பொதுவாக இந்தியாவுக்கும், இலங்கை நாட்டிற்கும் இடையேயான சுற்றுலா உறவு, மிகவும் பிணைப்புடன் இருந்தது.

ஆனால், கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று, ஈஸ்டர் தினத்தன்று, தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், 270-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில், 11 பேர் இந்தியர்கள் ஆவர். எனவே, இந்த குண்டு வெடிப்புக்கு பிறகு, இலங்கைக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் வருகை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in உலகம்

To Top