உயிரிழந்த முக்கிய நபர்! சோகத்தில் ஸ்ரீபிரியா!

கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன், பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீபிரியா. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய படங்களிலும், பல முன்னணி நடிகர்களுடன், ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தற்போது, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில், முக்கிய பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இவரது தாயார் குடந்தை கிரிஜா பக்கிரிசாமி, வயது மூப்பு காரணமாக, இயற்கை எய்தியுள்ளார். இதனை அறிந்த திரையுலகினர், ஸ்ரீபிரியாவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.