அஜித் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் புற்று நோயால் காலமானார்..!

தமிழ் சினிமாவில் அஜித்தின் நண்பராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.

அஜித் நடிப்பில் வெளியான ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு ,உள்ளிட்ட ஒன்பது திரைப்படங்களை தயாரித்தார் எஸ்.எஸ். சக்கரவர்த்தி மேலும் காதல் சடுகுடு, காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்திருந்தார்.

எஸ்.எஸ்.சக்கரவர்த்தி புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை சென்னையில் உயிரிழந்தார். அவரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News