அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. கணவனை கொன்ற போலீஸ் மனைவி.. கண்ணை மறைத்த காதல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வந்த இவர், போலீஸ் வாகனத்தை திருடி விற்பனை செய்ததால், டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தார்.

இவருடைய மனைவி சித்ரா என்பவர், சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில், SSI-ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சித்ராவிற்கும், கமல் ராஜ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி வீட்டில் தனிமையில் சந்தித்துள்ளனர். இதனை அறிந்த செந்தில்குமார், தனது மனைவியை கடுமையாக எச்சரித்துள்ளார். இருப்பினும், கள்ள உறவை தொடர்ந்த சித்ரா, தனது கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, ரூபாய் 10 லட்சத்தை செலவழித்து, கூலிப்படையை ஏவி, தனது கணவனை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். அதில், சித்ரா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்தார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். மேலும், சம்பவத்ததில் தொடர்புடைய சித்ரா, சரோஜா, கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார், ராஜபாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.