சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே, பாமக சார்பில் கட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துக் கொண்டார். மேடையில் ஏறி அவர் பேசும்போது, அங்கிருந்த தொண்டர்களும் மேடையின் மீது ஏறியுள்ளனர்.
அப்போது, பாரம் தாங்க முடியாமல், மேடை சரிந்து விழுந்தது. இதில், மேடையில் இருந்த அனைவரும் கீழே விழுந்த நிலையில், அன்புமணி மட்டும் அங்கிருந்து கீழே எகிறி குதித்தார். 5 நிமிடங்களுக்கு பிறகு, சாதாரண நிலைக்கு மாறிய அன்புமணி, மீண்டும் பேசத் தொடங்கினார்.
இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் பேசிய அவர், அடுத்த முறையாவது பலமான மேடையை போடுங்கள் என்று கூறிவிட்டு சென்றார். பாரம் தாங்காமல் மேடை சரிந்து விழுந்த சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.