சென்னை ஆலந்தூர் மண்டலம் GST சாலை பழவந்தாங்கல் சுரங்க பாதை, அம்மன் கோவில் தெரு, வேம்புலி அம்மன் கோவில் தெரு, நங்கநல்லூர் நான்காவது மெயின் ரோடு, மற்றும் ஐந்தாவது மெயின் ரோடு, ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் மற்றும் நீர்வளத்துறையின் பணிகளை தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்.
அடுத்தபடியாக போரூர், மெயின் ரோடு குன்றத்தூர், பிரதான சாலை பூந்தமல்லி மெயின் ரோடு, அசோக் பில்லர் உள்ளட்ட சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் நீர்வளத்துறையின் பணிகளையும் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதோடு அங்கிருந்த கோப்புகளையும் ஆய்வு செய்து தகவல்களை கேட்டு அறிந்தார்.