உலக நாயகனுக்கு முக.ஸ்டாலின் வாழ்த்து..!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகரும்,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக இருப்பவர் உலகநாயகன் கமல். தமிழ் சினிமாவின் வரலாறாக திகழும் இவர், தனது 68-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார்.

இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலைமைச்சர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியுன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலையே வாழிய நின் கலைத்திறம் என்று வாழ்த்தியுள்ளார்.