ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு ஸ்டாலின் ஆட்சியே சாட்சி – எடப்பாடி பழனிச்சாமி..!

கோவையை புறக்கணிக்கும் திமுக ஆட்சியை கண்டித்து, முன்னால் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இதனைத் தொடங்கி வைத்து பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் 10-ஆண்டு பொற்கால ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்றார்.

அதிமுக அரசால் கோவைக்கு கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய எடப்பாடி, அதிமுக அரசை அவதூறு கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவர், திமுக ஆட்சியில் எத்தனை பெரிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு 18 மாதகால திமுகவின் ஸ்டாலின் ஆட்சியே சாட்சி ஆவேசமாக கூறியுள்ளார்.