சின்னத்திரையில் இருந்து சினிமாவில் நுழைந்த நடிகர்கள், பெரிய அளவில் வெற்றி பெற மாட்டார்கள் என்ற பிம்பம் உள்ளது. அந்த பிம்பத்தை, லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு வெற்றி படங்களின் மூலம், கவின் உடைத்திருந்தார்.
இதனால், இவரது அடுத்த திரைப்படமான ஸ்டார் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த 10-ஆம் தேதி வெளியான அந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இருப்பினும், வசூலில் தளர்வடையாத இப்படம், இதுவரை 21 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெறும் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், தற்போது பட்ஜெட்டை காட்டிலும் அதிகம் வசூலித்து, வெற்றிபடமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.