Connect with us

Raj News Tamil

ஓடிடி ரிலீஸிலும் அடிவாங்குமா ஸ்டார்? வசமாக சிக்கும் கவின்!

சினிமா

ஓடிடி ரிலீஸிலும் அடிவாங்குமா ஸ்டார்? வசமாக சிக்கும் கவின்!

கவினின் முந்தைய படங்களின் வெற்றியாலும், இயக்குநர் இளனின் மீது இருந்த நம்பிக்கையாலும், ஸ்டார் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், கடந்த 10-ஆம் தேதி அன்று வெளியான அந்த திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பாதி தான் பூர்த்தி செய்திருந்தது. இதனால், திரையரங்குகளின் இப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் உள்ளது.

இந்நிலையில், ஸ்டார் திரைப்படம், வரும் ஜூன் 4-ஆம் தேதி அன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக, தகவல் கசிந்துள்ளது. அன்று தான் தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பதால், ஒட்டுமொத்த இந்தியாவும் அதன் மீது கவனம் வைத்திருக்கும்.

ஆனால், அதே தினத்தில் ஸ்டார் படத்தை வெளியிடுவதால், போதிய வரவேற்பு இருக்குமா என்பது சந்தேகம் தான். இதனால், தியேட்டரிலும் அடிவாங்கிய ஸ்டார், ஓடிடியிலும் அடிவாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top