திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவது, மத்திய அரசுக்கு கண்டனம் உட்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலம், தேர்தல் பரப்புரையை உடனடியாக தொடங்குமாறு தொண்டர்களுக்கு கட்சியின் உயர்நிலைச் செயல்திட்டக் குழு அறிவுறுத்தி உள்ளது.
துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் என்று மக்கள் இயக்கத்தை தொண்டர்கள் அனைவரும் தொடங்குமாறு திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது