தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ஷகீலா. இவருக்கு ஷீத்தல் என்ற வளர்ப்பு மகள் உள்ளார்.
இந்நிலையில், இவருக்கும், ஷீத்தலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், ஷகீலா மீது, ஷீத்தல் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதையடுத்து, ஷகீலா காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரை வாபஸ் வாங்க வற்புறுத்தி, ஷீத்தல் மீண்டும் தகராறு செய்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த ஷகீலாவின் பெண் வழக்கறிஞர் மீதும், பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.