தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டத்தில் நடத்தப்பட்ட போலீசாரின் துப்பாக்கிச் சூட்டின் போது சுமார் 13-பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பொது மற்றும் தனியார் சொத்துக்கள் பெருமளவு சேதமடைந்தன. இதுகுறித்து விசாரணை செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
இதுகுறித்து கடந்த சட்டப்பேரவையில் பேசிய முதலைமைச்சர் ஸ்டாலின், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட நிதியோடு, முதலைமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.