ஊக்க மருந்து புகார் ! சிக்கிய மல்யுத்த வீராங்கனை!

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவரான சீமா பிஸ்லா ஊக்க மருந்து எடுத்துக்கொண்டதாக கூறப்பட்ட புகாரில், அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் சீமா பிஸ்லா(30). இவர் இந்தியாவிற்காக கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை ஆவார். தற்போது,இவர் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் சீமாவுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதித்து ஊக்க மருந்து தடுப்பு மையம் உத்தரவிட்டுள்ளது. அவரது தடைக்காலம் இந்த ஆண்டு மே 12 அன்று தொடங்கியதாக தெரிவித்துள்ளது.

2021-ம் ஆண்டு கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் பிரிவில் சீமா வெண்கலம் வென்றார். அவர் 2021-ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் 50 கிலோ ரவுண்ட் ஆஃப் போட்டியில் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News