ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல்!

ஆந்திரா மாநிலத்தில் மே-13 தேதி அன்று சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி தற்போது கட்சி தலைவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேருந்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது கூட்டத்தில் இருந்து மலர்களுடன் கற்களும் வீசப்பட்டன. இதில் ஒரு கல் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது கண்ணுக்கு மேல் உள்ள நெற்றி பகுதியில் பட்டது. இதில் அவரது இடது புருவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில், முதலமைச்சருக்கு அருகில் இருந்த எம்எல்ஏ எல்லம்பல்லி இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின் தேர்தல் பிரசாரத்தை ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து மேற்கொண்டார்.

கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News