வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு: ரயில்வேக்கு ரூ.55 லட்சம் இழப்பு!

வந்தே பாரத் ரயில்கள் மீதான கல்வீச்சு சம்பவங்களால் ரூ.55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது; மொத்தம் 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 பிப்ரவரியில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. தற்போது 25 வழித்தடங்களில் 50 ரயில்கள் இயங்குகின்றன.

இந்த ரயில்கல் மீது அவ்வப்போது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்துவதால் ரயிலின் கதவுகளும், ஜன்னல்களும் சேதமடைகின்றன.

இதுகுறித்து மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் அளித்த பதில்:

“வந்தே பாரத் ரயில்கள் மீது கடந்த 2019 முதல் 2023 ஜூன் மாதம் வரை நடத்தப்பட்டு கல்வீச்சு சம்பவத்தால் ரயில்வேவுக்கு ரூ.55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட 151 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் எந்தவொரு பயணிகளும் காயமடையவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News