லிபியாவில் புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது; 10 ஆயிரம் பேர் மாயம்!

லிபியாவை புரட்டிப்போட்ட புயலால் அங்கு வெள்ளத்தில் சிக்கி 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 10 ஆயிரம் பேர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவை டேனியல் என்ற புயல் தாக்கியது. மத்திய தரைக்கடலில் உருவான இந்த புயல் லிபியாவின் கிழக்கு பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் அங்குள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக டெர்னா, சூசா, பாய்தா, மார்ஜ் உள்பட பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியது.

இதன் விளைவாக, அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரு அணைகளில் உடைந்து வெள்ள நீா் அருகிலுள்ள டொ்ணா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாய்ந்தது.வாடி டொ்ணா உருவாகும் மலைப் பகுதிக்கும், அது மத்தியதரைக் கடலில் கலக்கும் முகத்துவாரத்துக்கும் இடையே டொ்ணா நகரம் அமைந்துள்ளதால் அணை உடைந்து பாய்ந்து வந்த வெள்ள நீா் அந்த நகரிலிருந்த வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட பொருள்களை அடித்துச் சென்று கடலுக்குள் தள்ளியது.

இந்த நிலையில் வியாழன் நிலவரப்படி டெர்னாவில் பலியானோர் எண்ணிக்கை 11,300 ஆகவும், மேலும் 10 ஆயிரம் பேர் காணவில்லை என்றும் லிபிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News