“தொந்தரவு பண்ணாதீங்க” – ரசிகர்களிடம் சொன்ன சிம்பு!

கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில், இந்த படத்தின் 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதில், நடிகர் சிம்பு கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, ரசிர்களுக்கு முக்கியமான வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார். அதாவது, படத்தின் அப்டேட் கேட்டு தொந்தரவு பண்ணாதீங்க.. உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது.

ஆனால், தினமும் நீங்கள் ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்று கேட்கும் பொழுது ஒரு தவறான முடிவு எடுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. என் படம் மட்டுமல்ல எந்த படத்திற்கும் ரொம்ப தொந்தரவு செய்யாதீர்கள்.

உங்களுக்கு நல்ல படம் கொடுக்க நாங்கள் எல்லாம் உழைத்து கொண்டிருக்கிறோம். இது என்னுடைய ‘பத்து தல’ இயக்குனர் சொல்ல சொன்னார். அதனால் தான் கூறினேன்” என்று தனது பேச்சை முடித்தார்.