தாஜ் ஓட்டலில் நிம்மதியாக தூங்கிய தெரு நாய்.. ஊழியர்களுக்கு ரத்தன் டாடா போட்ட உத்தரவு.. நெகிழ்ச்சி சம்பவம்..

இந்திய அளவில் மிகவும் பிரபலமான தொழில் அதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா. டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற இவர், விலங்குகளின் மீது அதிக பாசம் வைத்தவர்.

இதுமட்டுமின்றி, இவர் மனிதநேயத்திற்கு ஆதரவாக செயல்படக் கூடியவரும் ஆவார். விலங்குகள் மீது தனக்கு உள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக, பாம்பே ஹவுஸ் என்று அழைக்கப்படும், மும்பையில் உள்ள டாடா குழுமத்தின் தலைமையகத்தில், நாய்களுக்கென தனியாக ஒரு பிரிவே இருந்தது.

ரத்தன் டாடா தலைவர் பதவியில் இருந்தபோது, தெரு நாய்களின் பாதுகாப்பு குறித்து, கடுமையான உத்தரவுகளை, ஊழியர்களுக்கு விதித்து இருந்தாராம்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாஜ்மஹால் 5 நட்சத்திர ஓட்டலின் நுழைவு வாயிலில், தெரு நாய் ஒன்று அமைதியாக உறங்கியுள்ளது. அந்த ஓட்டலில் தங்கிய ரூபி கான் என்ற பெண், அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.

அதற்கு, நாய்களை நடத்தும் விதம் குறித்து ரத்தன் டாடா விதித்திருந்த அறிவுறுத்தல் குறித்து, ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதனைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த அவர், தனது லிங்குடு இன் பக்கத்தில், அந்த நாயின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும், “தாஜ் மஹால் விடுதியின் நுழைவு வாயில் இதுதான். நம் நாட்டின் மிகவும் ஆடம்பரமான, சிறந்த 5 நட்சத்திர விடுதிகளில் ஒன்று. நான் இங்கு தங்கிய நேரத்தில், எந்தவித கவலையும் இல்லாமல், ஒரு உயிரினம் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்ததை கவனித்தேன்.

ஆர்வத்தின் காரணமாக, விடுதியின் பணியாளர்களிடம், அந்த நாய் குறித்து கேட்டேன். அதற்கு, அந்த நாய் பிறந்ததில் இருந்தே, இந்த விடுதியின் ஒரு பாகமாக உள்ளது என்பதை அறிந்துக் கொண்டேன்.

மேலும், விடுதியின் வளாகத்தில் நாய்கள் வந்தால், அவை சிறந்த முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது ரத்தன் டாடாவின் அறிவுறுத்தல் ஆகும். அது அந்த விதிமுறை இன்னும் அங்கு உள்ளது” என்று கூறினார்.

இந்த பதிவு, இதுவரை 5 ஆயிரம் லைக்ஸ்களையும், 100-க்கும் மேற்பட்ட ரியாக்ஷன்களையும், பெற்று வைரலாக பரவி வருகிறது. மேலும், இவரது இந்த பதிவு, தாஜ் விடுதியின் நிர்வாகத்தின் கவனத்திற்கும் சென்றுள்ளது.

இதுகுறித்து அந்த பெண்ணுக்கு ரிப்ளை செய்த அந்நிறுவனம், “Hi ரூபி, இந்த ஸ்டோரியை பகிர்ந்ததற்கு நன்றி, தாஜ் நிறுவனத்தில், நாங்கள் கருணையையும், அனைவரையும் உள்ளடக்குதலையும் மதிக்கிறோம். அனைத்து விருந்தினர்களும், அவர்களுடைய வீடு போல உணர்வதை உறுதி செய்துக் கொள்கிறோம். எங்களுடைய முக்கிய மதிப்பு, உங்களது பிரதிபலிப்பின் மூலம் நிச்சயம் எதிரொலிக்கும்” என்று கூறியுள்ளது.

RELATED ARTICLES

Recent News