Connect with us

Raj News Tamil

வலுக்கும் போர்: இதுவரை 4,200 பேர் உயிரிழப்பு!

உலகம்

வலுக்கும் போர்: இதுவரை 4,200 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 4,200 கடந்தது.

இஸ்ரேல் நாட்டில் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,300 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் இதற்கு பதில் தாக்குதல் நடத்தியது இதில் 1,417 பேர் உயிரிழந்ததாக காஸா தெரிவித்திருந்தது.

உயிரிழந்தவர்களில் 447 சிறுவர்களும், 248 பெண்களும் அடங்குவர் என்று அமைச்சகம் கூறியது.

அத்துடன், இஸ்ரேல் தாக்குதல் காரணமாக மேற்குக் கரையில் 28 பேரும், லெபனானில் 6 பேரும் கொல்லப்பட்டனர்.

இது தவிர, தங்கள் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய 1,500 ஹமாஸ் படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

More in உலகம்

To Top