Connect with us

ஸ்டிரைக் வாபஸ்: ஆம்னி பேருந்துகள் இயங்கும்!

தமிழகம்

ஸ்டிரைக் வாபஸ்: ஆம்னி பேருந்துகள் இயங்கும்!

கூடுதல் கட்டண புகார் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகம் முழுவதும் 120 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு இன்று அக் 24. மாலை ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவித்து இருந்தது.

இந்நிலையில், சென்னை கே.கே. நகரில் உள்ள இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில், தென்மாநில ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு உடன் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில், தென் மாநில ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்றதால் வேலை நிறுத்த அறிவிப்பு திரும்பபெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top