தொடரும் தற்கொலைகள்….சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை!

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் பி.டெக். 2 ஆம் ஆண்டு படித்து வந்த கேதார் சுரேஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடந்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் ஆந்திராவை சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News