சென்னை ஐ.ஐ.டியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாக சென்னை ஐ.ஐ.டியில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் பி டெக் படித்து வந்த நிலையில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விடுதி நிர்வாகம் போலீசுக்கு தகவல் அளித்தது.
இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.