வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!

பாகிஸ்தானில் பள்ளி பேருந்தின் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கண்டித்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்வாட் பள்ளத்தாக்கில், பள்ளி வளாகம் ஒன்றின் வெளியே 15க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பேருந்தில் பயணித்த சிறுமி படுகாயமடைந்தார்.