ஸ்டன்ட் கலைஞர் கோதண்டராமன் காலமானார்!

ஸ்டன்ட் கலைஞராக தனது பயணத்தை தொடங்கியவர் கோதண்டராமன். இவர், கலகலப்பு என்ற படத்தில், சந்தானத்துடன் காமெடி காட்சிகளில் இணைந்து நடித்து பிரபலம் அடைந்தார்.

25 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்த கோதண்டராமன், உடல்நலப் பிரச்சனை காரணமாக, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி, சென்னை பெரம்பூரில் உள்ள தனது இல்லத்தில், காலமானார்.

இவருக்கு வயது 65. கோதண்டராமனின் மறைவை அறிந்த திரையுலக பிரபலங்கள், தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News