நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. நரேந்திர மோடி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்று ஒட்டுமொத்த பாஜகவினரும் போராடி வரும் நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வேறு விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
ப்பிரமணியன் சுவாமி. பாஜகவில் இருந்தபோதிலும், அக்கட்சியையும், தலைவர்களையும் விமர்சிக்க தயங்கியதில்லை. அவருக்கு முக்கியமான பதவியை ஏதும் கொடுக்காமல் வைத்திருப்பதாலேயே, அவர் இவ்வாறு அதிருப்தியில் பேசுவதாக பாஜகவினர் சிலர் கூறுவது உண்டு.
இந்நிலையில், இன்று மதுரைக்கு சென்ற சுப்பிரமணியன் சுவாமி அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் “மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவாரா?” என்று கேள்வியெழுப்பினார். அதற்கு சட்டென, “அவர் வரக்கூடாது. மோடியை தோற்கடித்தே ஆக வேண்டும்.
பாஜக ஆட்சிக்கு வரலாம். ஆனால் மோடி வரவே கூடாது. இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி, ஒன்றுமே செய்யவில்லை. நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் இருக்கிறது. அதை மேம்படுத்தவும் அவர் எதையும் செய்யவில்லை. சும்மா விளம்பரத்தில் மட்டும் நாங்கள் அதை செஞ்சுட்டோம் இதை செஞ்சுட்டோம்னு சொல்றாங்க. ஆனால் உண்மையில் ஒன்றும் செய்யவில்லை என அவர் கூறியுள்ளார்.