சபரிமலையிலும் வாரிசு, துணிவு போட்டி..!

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களின் படங்கள் விழாக்காலங்களில் வெளியாகி, அவ்வப்போது கருத்து மோதல்களை உண்டாக்கும். இந்த நிலையில் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவர்களின் ரசிகர்கள் படம் வெற்றிபெற வித்தியாசமான முறையில் விளம்பரங்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் அஜித்தின் ரசிகர்கள் துணிவு படம் வெற்றி பெற வேண்டி போஸ்டருடன் சென்று பிராத்தனை செய்தது இணையத்தில் வைரலாகியது. தற்போது அதேப்போலவே விஜயின் ரசிகர்கள் வாரிசு போஸ்டருடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிராத்தனை செய்தது தற்போது வைரலாகி வருகிறது.