வாரிசு 2-வது பாடல் ”முப்பது வருட முயற்சி வியர்வை”..?

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
இப்படத்தின் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தமன் இசையமத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே ரஞ்சிதமே வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்தது. மேலும் படத்தின் இரண்டாவது பாடல் டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயின் முப்பது வருட திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, பாடலாசிரியர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் ”முப்பது வருட முயற்சி,வியர்வை, நெஞ்சில் உள் உரம் போட்டு வளர்த்த தீ” என்று போஸ்டருடன் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் பாடலின் வரிகள் வேற லெவெல் என்று மகிழ்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.