சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது சிச்சுவான் பிராந்தியம் இதன் தெற்கில் உள்ள ப்யூகே என்னும் இடத்தில் உள்ளாட்சி அதிகாரிகள் புதிய சட்டம் ஒன்றை கொண்டவந்துள்னா்.இச்சட்டத்தின்படி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாத்திரங்களை துலக்காமலோ,படுக்கையை அலங்கோலமாக வைத்திருந்தாலோ,உணவுகளை பயன்படுத்தும் போது சுகாதரமற்றோ இருந்தாலோ
அபராதம் விதிக்கப்படுமாம்.
பொது இடத்தை பேணிகாக்கவும் , வாழும் சூலலை
மேம்படுத்தவே இவ்விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாம்.இதன்தொடா்ச்சியாக மக்களின் நடத்தையை சரி செய்ய 14 கட்டுபாடுகளும்
விதிமுறைகளும், இந்த அமைப்பு அறிவித்துள்து.
மேலும் , உள்ளாட்சி அதிகாரிகள் திடீா் சோதனையில் ஈடுபடுவார்களாம்.ஒருமுறை சிக்கியவீடு மீண்டும் அகப்பட்டால் அவா்களுக்கு அபராதம்
இரட்டிப்பாகுமாம் ஒரு விவசாயியின் வீட்டிற்கு வந்தால் அங்கு நிலவும் சுகாதார சூழ்நிலை பார்க்க சகிக்கும்படியாக இல்லை. கொசுக்கள், நாய்கள் சூழ்ந்திருக்க ஒரு அசுத்தமான சூழலே நிலவுகிறது. அபராதத்தால் மட்டுமே இதை தடுக்க முடியாது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆனால், அபராதம் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என இந்த அறிவிப்பு குறித்து உள்ளாட்சி அமைப்பின் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.இச்சட்டம் குறித்து உலகில் பலரும் தங்களது
கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.