நடிகர் விஜய்யின் 68 படத்தை பிரபல இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்குகிறாா்.சமீபத்தில் , இப்படத்தின் பூஜையை முடித்துவிட்டு ஒரு பாடல் காட்சியை படமாக்கப்பட்டதாகவும் அதில் விஜய், பிரசாந்த் உள்ளிட்டோர் நடனம் ஆடியதாகவும் தகவல் வெளிவந்தன.மாபெரும் எதிா்பாா்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இப்படத்தின் ஷீட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தளபதி 68 படத்தில் நடிகர் ஜெய் முக்கியமான ரோலில் நடிக்கிறாராம். அந்த ரோல் தான் படத்தில் திருப்புமுனையாக இருக்கும் என்று சொல்லபடுகிறது. மேலும் , இந்த விஷயம் சர்ப்ரைஸாக வைக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது என சினிமா வட்டாரங்களில் தகவல் வெளிவந்துள்ளது.