உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக், அரையிறுதியில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி, இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியுற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய பங்களிப்பு வீரர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் ஆவார். 33 வயதான முகமது ஷமி 6 போட்டிகளில் விளையாடி 23 விக்கெடுகளை வீழ்த்தினார். இந்நிலையில், நடப்பாண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது அர்ஜூனா விருது. இந்தியாவில் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் இரண்டு உயர்ந்த விருதில் அர்ஜூனா விருது,கேல் ரத்னா விருதுமாகும்.
அந்தந்த விளையாடு அமைப்புகள் பரிந்துரைக்கும் வீரர் வீராங்கனைகளின் பட்டியலை மத்திய தேர்வு குழு பரீசலனை செய்து விருதுக்கான பட்டியலை வெளியிடும். இந்த நிலையில், நடப்பாண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக செயல்பட்ட முகமது ஷமிக்கு வழங்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய விளையாட்டுத்துறைக்கு பிஸிஸியை முகமது ஷமியின் பெயரை சோ்க்க கோரிக்கை விடுத்துள்ளதால் , இதனை அறிந்த ஷமி ரசிகா்கள் இச்செய்தியை கொண்டாடிவருகின்றனா்.