ஸ்டாலினுடன் பாஜக எம்எல்ஏ-க்கள் திடீர் சந்திப்பு..!

சென்னை தலைமைச் செயலகத்தில் பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னர் உள்ளிட்டோர் சந்தித்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தங்கள் தொகுதி சார்ந்த கோரிக்கை மனுக்களை அளித்தோம் எனத் தெரிவித்தனர்.

அங்கு பேசிய சட்ட மன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நெல்லையப்பர் கோவிலுக்கு அண்டர் கிரவுண்ட் கேபிள் வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் உள்ள கோரிக்கைகளை முன் வைத்தனர். இவர்கள் அண்மையில் முதல்வர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.