கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னஎலசகிரியில் உள்ள அம்பேக்கர் நகர் குடியிருப்பு பகுதியில் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் உள்ள ஏரியில் ஆழ்த்துளை கிணறு அமைத்து வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர்வினியோகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இரவு முதல் அப்பகுதியில் உள்ள ஒரு சிலருக்கு வாந்தி,மயக்கம், வயிற்றுவலி, வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உதவி ஆட்சியர் பிரியங்கா, மேயர் சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் மருத்துவமனையில் சிச்சைப்பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு தண்ணீரில் கழிவு நீரில் கலந்துள்ளதா, அல்லது தொழிற்சாலை கழிவு நீரா வேறு காரணமா என சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.