பிரபல நடிகரை காதலிக்கும் ரெஜினா?

மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ரெஜினா. இவரது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், திரை உலக பிரபலங்கள் பலரும், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த வகையில், நடிகர் சுதீப் கிஷனும், தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதில், “ஹாப்பி பர்த்டே பாப்பா.. லவ் யூ.. உனக்கு எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மேலும், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் அவர், பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், இருவரும் காதலிப்பதாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.