Connect with us

Raj News Tamil

டிராப் ஆன சூர்யா படம்? சிவகார்த்திகேயனுடன் சேர்ந்த பிரபல இயக்குநர்?

சினிமா

டிராப் ஆன சூர்யா படம்? சிவகார்த்திகேயனுடன் சேர்ந்த பிரபல இயக்குநர்?

சூர்யா நடிப்பில், சுதா கொங்காரா இயக்கத்தில் முதன்முதலில் உருவான திரைப்படம் சூரறைப்போற்று. அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு பிறகு, சூர்யாவும், சுதா கொங்காராவும், புறநானூறு என்ற திரைப்படத்தில் மீண்டும் இணைய இருந்தனர். ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த திரைப்படம் டிராப் ஆகிவிட்டது.

இந்நிலையில், சுதா கொங்காராவும், நடிகர் சிவகார்த்திகேயனும் புதிய படம் ஒன்றில் இணைய இருப்பதாக, தகவல் கசிந்துள்ளது.

புறநானூறு படத்தின் கதையில் தான் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளாரா? அல்லது இது வேறு கதையா? என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

More in சினிமா

To Top