Connect with us

Raj News Tamil

தொடரும் அவலம்: கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த நபர் பலி!

தமிழகம்

தொடரும் அவலம்: கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த நபர் பலி!

தாம்பரம் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷ வாயு தாக்கியதில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்திற்க்கு சொந்தமான ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பலர் வசித்து வருகின்றனர்.

இங்கு ஒரு பகுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்க்காக வாகனம் மூலம் கழிவுகளை அகற்றிய பின்பு அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (52) என்பவரை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய கூறினர்.

இதனால் தேவராஜ் கழிவு நீர் தொட்டியில் இறங்கிய போது விஷ வாயு தாக்கியதில் மயங்கி விழுந்தார் இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் தேவராஜை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவரை பரிசோதனை செய்த மருத்துவரகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த ஓட்டேரி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கழிவு நீர் தொட்டிகளை ஆட்களை கொண்டு சுத்தம் செய்ய கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்று சுகாதாரதுறை சார்பில் எச்சரிக்கை விடுத்தும் பொருட்படுத்தாமல் இருந்ததே விபத்திற்க்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top