டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள நிலையில் மக்கள் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாகவே டெல்லிக்கு காற்று மாசு பெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில், தீபாவளி வாரம் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் காற்றின் தரம் இன்றும் (அக்.28) மிக மோசமாக உள்ளது.
காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் ஜனவரி 1, 2025 வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பனி காலத்தில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்லி வாழ் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம் பூஜ்ஜியம் முதல் 50 வரை இருக்க வேண்டிய நிலையில், 264 என்பது மிகவும் மோசமான நிலை எனவும், டெல்லி அரசு உடனடியாக இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.