Connect with us

Raj News Tamil

உடலில் பாய்ந்த புல்லட்.. பாஜக தலைவரின் உறவினர் கொலை.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..

இந்தியா

உடலில் பாய்ந்த புல்லட்.. பாஜக தலைவரின் உறவினர் கொலை.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..

கடந்த 2023-ஆம் ஆண்டு, மருத்துவர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் விஜய் நாராயண். உள்ளூர் பாஜக தலைவரின் உறவினரான இவருக்கு, இந்த வழக்கில், கடந்த மார்ச் 14-ஆம் தேதி அன்று, ஜாமீன் கிடைத்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி அன்று, உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதிக்கு, அனுஜ் சர்மா என்பவருடன் சென்றிருந்தார். அப்போது, அவருக்கும், அங்கிருந்த அஜய் என்ற நபருக்கும் இடையே, குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு முற்றிய நிலையில், அஜய் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து, விஜய் நாராயணை சுட்டுத்தள்ளினார். அப்போது, இதனை தடுக்க வந்த அனுஜ் சர்மா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மிகவும் பரபரப்பான சாலையில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில், விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில், அஜய் சர்மா சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், விஜய் நாராயண் கொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள், தற்போது காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அந்த சிசிடிவியில், மிகவும் முக்கியமான துப்பு ஒன்று, காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

அதாவது, ஒருவர் அல்ல இரண்டு பேர் சேர்ந்து தான், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். விஜய் நாரயண்ணை கொலை செய்துவிட்டு, இருவரும் இருசக்கர வாகணத்தில் தப்பியோடியுள்ளனர்.

இந்த வழக்கில், காவல்துறையினர், தப்பியோடிய இரண்டு குற்றவாளிகளையும் பிடிப்பதற்கு, தனிப்படை அமைத்துள்ளனர்.

More in இந்தியா

To Top