காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இந்த படத்திற்கு பிறகு, மாசிலாமணி, வம்சம், நீர் பறவை என்று பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
35 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் இவர், தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவரது கையை, இன்னொரு கை இருக்கமாக பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும், லாக் செய்யப்பட்ட பூட்டின் எமோஜியையும், அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன்மூலம், இவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவிட்டு, வாழ்த்து கூறி வருகின்றனர்.