Connect with us

Raj News Tamil

மாஸ் கூட்டணி வைக்கும் சுந்தர் சி..! இததான் எதிர்பார்த்தோம்..!

சினிமா

மாஸ் கூட்டணி வைக்கும் சுந்தர் சி..! இததான் எதிர்பார்த்தோம்..!

காமெடி கலந்த கமர்ஷியல் படங்கள் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. இவரது திரைப்படங்களை, இப்போது டிவியில் ஒளிபரப்பினாலும், அதனை பார்க்க ஒரு கூட்டம் உள்ளது.

சமீபத்தில் கூட, இவரது இயக்கத்தில் உருவான அரண்மனை 4 திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, 100 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. இதனால், இவர் அடுத்து இயக்க உள்ள படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் வடிவேலுவும், சுந்தர் சியும் இணைந்து, புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்களாம்.

முழு நீள காமெடி கதையாக உருவாக உள்ள இப்படத்தை, சுந்தர் சி-யே தான் இயக்க இருக்கிறாராம். தகவலை அறிந்த ரசிகர்கள், இதனை தான் எதிர்பார்த்தோம் என்று உற்சாகமாக கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top