பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்! சாதித்த டிராகன் விண்கலம்!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில், முக்கிய விஞ்ஞானியாக இருப்பவர் சுனிதா வில்லியம்ஸ். இந்தியா வம்சாவளியை சேர்ந்த இவர், ஆராய்ச்சி பணிக்காக, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார்.

ஆனால், தொழில்நுட்ப பிரச்சனையின் காரணமாக, திரும்ப அவரால் பூமிக்க வர முடியவில்லை. இதையடுத்து, எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மூலமாக, டிராகன் என்ற விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 விஞ்ஞானிகளை பூமிக்கு திரும்பிக் கொண்டு வருவதற்கு அனுப்பப்பட்டது.

3 நாட்களுக்கு முன் அந்த விண்கலம், விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், இன்று அதிகாலை 3.27 மணிக்கு, பூமிக்கு திரும்பியது. இந்த விண்கலத்தில், சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 விஞ்ஞானிகளும் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

இந்த விண்கல பயணம், உலக வரலாற்றில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இந்த மிஷனுக்கு உதவியாக இருந்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும், பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

RELATED ARTICLES

Recent News