சுனிதாவிற்கு ஜோடியாகும் மைனாவின் கணவர்!

சின்னத்திரையில் நடித்து பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை மைனா நந்தினி. தற்போது, சினிமாவிலும் இவர் நடித்து வருகிறார். இவரைப் போன்றே, இவரது கணவர் யோகேஷ்-ம் சினிமாவில் சாதிப்பதற்கு, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், ரஞ்சித் என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில், யோகேஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தில், யோகேஷிற்கு ஜோடியாக, சின்னத்திரை பிரபலம் சுனிதா நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் பூஜை குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.