இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சன்னி லியோன், அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு, ஆபாச படங்களில் நடித்து, பிரபலம் அடைந்த அவர், அதன்பிறகு, அதில் நடிப்பதை தவிர்த்துவிட்டு, பாலிவுட் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
தற்போது, தென்னிந்திய சினிமாவிலும், தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் உத்தரபிரதேச மாநிலம் வாரனாசி பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு, விசேஷமாக நடைபெற்ற கங்கா ஆரத்தி விழாவில், அவர் கலந்துக் கொண்டார். இதுமட்டுமின்றி, சன்னி லியோனுடன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், நடிகருமான அபிஷேக் சிங்கும் கலந்துக் கொண்டார்.
கழுத்தில் மாலை அணிந்துக் கொண்டு, நெற்றியில் சந்தனம் பூசிக் கொண்டு, இந்த விழாவில் சன்னி லியோன் கலந்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.